தாயும், பன்னிரெண்டு வயது மகளும் ஆசுவாசமாக பகல் சோறு கறி ஆக்கினம்.
மகள் மனதில் வெகு நாளாக ஓரு சந்தேகம் இருந்து கொண்டு உறுத்தி உலுப்பியது..
சிறு பெண் தானே !
இன்று தான் அம்மாவும் நல்ல மூட் ல இருக்கிறா. !
'' அம்மா ஓண்டு கேட்பன் சொல்லுவியோ ? ''
இதென்ன வில்லெண்டமாய் போட்டுது ---
பொடி பெட்டை என்ன சில்லெடுப்பை எடுத்து விடபோறாளோ ! ---
'' சரி சரி கேளடி கேளடி''
எப்பவோ ஓரு நாளைக்கு கேக்கத்தானே போறாய் ! ---
ஓரு சின்ன சருமலுடன் கேட்டாள் '' ஏன் அம்மா நீ அடுத்த வீட்டு மாமியை நெடுக தேவடியா தேவடியா எண்டு திட்டுறீங்கள் ? ''
பொங்கி வந்த சிரிப்பை அடகிக் கொண்டு
'' உனக்கிப்ப உதே பெரிய விஷயமாய் போச்சு ! ''
'' பின்னை என்னம்மா அவவை ஏன் நெடுக தேவடி தேவடி எண்டுறியள் ''
'' அதடி பிள்ளை உன்ர கொப்பன் கள்ள சாராயம் வடிக்கிறார் அல்லே --- அது போல அந்த மாமீன்ர மனுசனும் தே வடிக்கிறாராமடி ''
'' தே எண்டால் ''
'' தே எண்டால் தேத்தண்ணி தான்ரி எளிய நாயே --- சும்மா அலட்டாமல் அந்த ஏப்பையை எடுத்து தாடி விசரி ''
எண்டு செல்லமாய் திட்டினாள் தாய் மன கிலேசம் அடங்கியவாறு .
No comments:
Post a Comment
Your critical, pithy comments are most welcomed, so long as they are couched in decent you-know-what.
Unless you point out my errors yours truly will never improve. And you won't be content.
Thanks and Cheers,
Popeeman